இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கருப்பு'. இன்று (ஜூலை 23) சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதற்காக நேற்று இரவு படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்கள். அதில் 'சுருட்டு' பிடித்துக் கொண்டு சூர்யா நடக்க, சுற்றிலும் கிராமத்து தெய்வங்களின் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் சிலர் நின்றிருக்கும் வகையிலான போஸ்டர் டிசைன் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை கிராமத்துத் தெய்வங்களின் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
இருந்தாலும் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் இடம் பெற்றால் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறும் விதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த பல வருடங்களாகவே நடவடிக்கை எடுத்து வருகிறது.
சினிமாவில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்த ரஜினிகாந்த் கூட அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டார். இடையில் 'ஜெயிலர்' படத்தில் அப்படி ஒரு காட்சி வந்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் 'நான் ரெடிதான்' பாடலில் விஜய் புகை பிடித்தபடியே நடனமாடியதும், பாடலில் மது அருந்துவது குறித்த வரிகள் இடம் பெற்றதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனுஷும் அவரது பட போஸ்டர்களில் புகை பிடிப்பதை வைத்து வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
சமூக அக்கறை கொண்ட ஒருவராக தன்னை காட்டிக் கொள்பவர் சூர்யா. அவரது மனைவி ஜோதிகா சில வருடங்களுக்கு முன்பு கோவில்களையும், மருத்துவமனைகளையும் ஒப்பிட்டுப் பேசியதும் சர்ச்சை ஆனது. அதன்பின் சூர்யா, ஜோதிகா இருவரும் தங்களது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக சிலவற்றைச் செய்தார்கள்.
பிறந்தநாள் அதுவுமாக, குறிப்பாக 50வது பிறந்தநாளில் 'சுருட்டு' பிடிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகப் போகிறது என்பது சூர்யாவுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி ஒரு போஸ்டரை அவர் வெளியிட அனுமதித்தது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியான போஸ்டர்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் அன்புமணி ராமதாஸ் கூட அமைதியாக இருக்கிறாரே என ரசிகர்கள் கேட்கிறார்கள்.
சில நடிகர்கள் இப்படி சர்ச்சை வரும் விதத்தில் வேண்டுமென்றே புகைப்பது, குடிப்பது போன்றவற்றை தங்கள் பட 'புரமோஷனுக்கு' பயன்படுத்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த 'சுருட்டு' போஸ்டரை உடனடியாக நீக்கச் சொல்வாரா சூர்யா ?, அதோடு அப்படி ஒரு போஸ்டர் வெளியானதற்கு வருத்தம் தெரிவிப்பாரா ?. அல்லது, படத்தின் கதைப்படி, காட்சிப்படி அது தேவையானதாக உள்ளது என்று சமாளிப்பாரா ?.