பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகி உள்ள படம் தலைவி. ஏ.எல். விஜய் இயக்க, ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் செப்., 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் பேசிய நடிகர் அரவிந்த்சாமி : ‛‛திறமையான நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் எனக்கும் வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் விஜய்க்கும் நன்றி. சில தினங்களுக்கு முன் படம் பார்த்தேன். இது ஒரு மாஸ்டர் கிளாஸாக இருக்கும். கங்கனா, தம்பிராமையா, மதுபாலா, சமுத்திரகனி எல்லோரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். 30 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். நிறைய பேருடன் பணியாற்றி உள்ளேன். நிறைய கற்று உள்ளேன். விஜய்யிடம் சிறப்பான திறமை உள்ளது.
என் திரைவாழ்வில் இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும். நிறைய பேர் என்னை புகழ்ந்து பேசினார்கள். அதற்கு நான் தகுதியானவனா என்று எப்போதும் என்னை கேட்டுக் கொள்வேன். இருந்தாலும் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். இந்த படம் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று காத்திருந்து ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது ஒரு அற்புதமான படம். மக்கள் நிச்சயம் தியேட்டர்களுக்கு வந்து பார்ப்பார்கள். படம் சிறப்பாக வந்துள்ளது. அதை பின்னணி இசையோடு படத்தை இன்னும் வேற லெவலுக்கு ஜிவி.பிரகாஷ் கொண்டு சென்றுள்ளார். அவருக்கும், ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என் நன்றி.
இவ்வாறு அரவிந்த்சாமி பேசினார்.