பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தெலுங்கு சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர். ஆனால் அப்படிப்பட்ட படத்திற்கு ஒரு சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் அவர் அல்லாடி வருவது தான் மிகப்பெரிய விஷயமாக தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தை வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய விரும்புகிறார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால் அதே நாளில் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படமும் அதே சங்கராந்தி பண்டிகையில் தான் வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில் சங்கராந்தி பண்டிகையில் வெளியாக உள்ள படங்களின் ஹீரோக்களிடம் ராஜமவுலி தனது ஆர்ஆர்ஆர் படத்திற்காக விட்டுக்கொடுக்குமாறு நட்புடன் கோரிக்கை வைத்து வருகிறாராம். ஆனால் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு சென்ற பிரபாஸ், அவரது கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக கைவிரித்து விட்டாராம்.
அதேசமயம் மகேஷ்பாபு ராஜமவுலியின் கோரிக்கைக்கு இணங்கி தனது படத்தின் தேதியை மாற்றி வைத்துக் கொள்ள சம்மதித்து விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியான போதும் இதேபோல மகேஷ்பாபு தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக்கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல ராஜமவுலியின் அடுத்த படத்தில் மகேஷ்பாபு தான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்பதும் மகேஷ்பாபுவின் இந்த இணக்கமான முடிவுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.




