கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் |
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் கான்ஜுரிங் பேய் படங்களுக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதற்கு முன் வெளிவந்த இரண்டு பாகங்களும் ரசிகர்கள் தனியாக தியேட்டரில் பார்க்க முடியாத அளவிற்கு திகிலாக இருந்தது. மற்ற படங்கள் போன்று அதிகமான ரத்தம், கொலை போன்ற குரூர காட்சிகள் இன்றி திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு இவற்றைக் கொண்டே மிரட்டுவது தான் கான்ஜுரிங் ஸ்டைல்
அந்த வரிசையில் இப்போது 3வது பாகம் வந்திருக்கிறது. இந்த படத்திற்கு தி டெவி மேட் மீ டூ இட் என்று தனி தலைப்பு வைத்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பே உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்து வந்ததாலும் இந்தியாவில் கடந்த வெள்ளிக் கிழமை தியேட்டர் திறக்கப்பட்ட மாநிலங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. காரணம் மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். இதுவரை 50 சதவிகித தியேட்டர்களே திறக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் திறக்கப்பட்ட தியேட்டர்களில் ஏதாவது படம் திரையிட வேண்டுமே என்பதற்காக கான்ஜுரிங் படத்தை பெரும்பாலான தியேட்டர்கள் திரையிட்டுள்ளன. படம் தமிழிலும் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மெல்ல மெல்ல தியேட்டருக்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள்.
பேய் பிடித்த ஒரு விடலை பையன் ஒருவரை கொடூரமாக கொலை செய்து விடுகிறான். போலீஸ் அவனை கைது செய்கிறது. கொலை செய்தது அவன் அல்ல அவனுக்குள் இருக்கும் பேய் என்று பேய் ஆராச்சியாளர்கள் கோர்ட்டில் வாதாடுகிறார்கள். இதனை கோர்ட் ஏற்க மறுக்கிறது.
இறைவன் இருக்கிறான் அவன் மக்களுக்கு நல்லது செய்கிறான் என்று கோர்ட் நம்பினால் சாத்தான் இருக்கிறான் அவன் கெடுதல் செய்கிறான் என்பதையும் நம்ப வேண்டும். பாசிட்டிவ் என்று ஒன்று இருந்தால் நெகட்டிவ் இருந்தே ஆக வேண்டும் என்கிறார்கள். இதனை ஏற்ற நீதிமன்றம் சாத்தான்தான் கொலை செய்தது என்பதை நிரூபிக்க சொல்கிறது. அவர்களால் நிரூபிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.