‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளிவந்த படம் பரான்சிக். டொவினா தாமஸ் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கொரோனா காலத்துக்கு முன்பு தியேட்டரில் வெளியான படம், கொரோனா வந்ததும் ஓடிடியில் வெளியானது. அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜேக்ஸ் பிஜோய் இசை அமைத்திருந்தார். அனஸ்கான், அகில்பால் இயக்கி இருந்தார்கள்.
இந்த படம் தற்போது "கடைசி நொடிகள்" எனும் பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. விஸ்வசாந்தி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏ.ஆர்.கே ராஜராஜா தமிழ் மொழிமாற்றம் செய்திருக்கிறார்.
வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார்.
போலீசார் இதனை ஏற்க மறுக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த உண்மை குற்றவாளியை பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிப்பதுதான் கதை. பாரன்ஸிக் ஆபீசராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.