வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நானும் ரெளடிதான், இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து மீண்டும் விஜயசேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. விக்னேஷ்சிவன் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. விஜய சேதுபதி - நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற நயன்தாரா அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்தார். இந்த தகவல் பரவியதை அடுத்து படப்பிடிப்புக்கு செல்லும்போது நயன்தாராவை பார்த்து விட வேண்டும் என்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அந்த ஓட்டலின் முன்பு கூடியிருக்கிறார்கள். இதனால் நயன்தாரா படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பாதுகாவலர்களை வரவைத்து ரசிகர்களின் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார் நயன்தாரா. இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.