ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா | பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | சச்சினை இயக்கிய ஓஜி பட இயக்குனர் |

மஹா படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, அதையடுத்து விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் 105 நிமிடங்கள், மை நேம் இஸ் ஸ்ருதி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 105 நிமிடங்கள் படத்தில் ஹன்சிகா ஒருவர் மட்டுமே படம் முழுக்க நடித்துள்ளார். சமீபத்தில் படமாக்கப்பட்ட அப்படத்தில் ஆறே நாட்களில் முழு படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா.
மேலும், சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் வெளியிடுவதோடு, கொரியா, சீனா போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.