2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான தமன்னா தற்போது பாலிவுட்டிலும் நல்ல பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தமன்னா நடிப்பில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தமன்னா நடிகை ஜெனிலியாவின் கணவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார்.
சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த காமெடி ரொமான்ஸ் படத்தில் பூனம் தில்லான், குஷா கபிலா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. 'பிளான் ஏ பிளான் பி'என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. "இது வழக்கமான கதையாக இருக்காது. ஒவ்வொரு கேரக்டரும் புதிதாகவே இருக்கும். இதை உருவாக்குவதில் மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சஷாங்கா கோஷ்.