ஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸிற்கு படம் இயக்கும் வெங்கட் பிரபு | கங்குவா இரண்டாம் பாகம் : நட்டி நட்ராஜ் வெளியிட்ட தகவல் | இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கிறார்கள் - தேவா பேட்டி | மைசூரு பண்ணை வீட்டில் தங்க நடிகர் தர்ஷனுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி | 'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: குழந்தைகளுக்கு பரிசளித்த மோகன்லால் | எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நடிக்க விரும்பும் சரத்குமார் | காலையில் அறிமுகமான மஞ்சு வாரியரின் கையால் மாலையில் விருது பெற்ற விஜய் சேதுபதி | நான் சுப்ரீம் ஸ்டாரா? : எனக்கே தெரியாது என்கிறார் சரத்குமார் | சினிமா தெரியாத கிராம மக்கள் உருவாக்கிய படம் 'பயாஸ்கோப்' | 'மிஸ்டர் பாரத்' ரஜினி பட கதையல்ல : இயக்குனர் விளக்கம் |
மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆக்சன் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார் நெல்சன்.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் டைரக்டர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க மிஷ்கினைத் தான் அழைத்தாராம் விஜய். முதலில் அதற்கு ஒத்துக் கொண்ட மிஷ்கின், அதையடுத்து தான் பிசாசு-2 படத்தை இயக்க வேண்டி இருந்ததால் தேதிகளை ஒதுக்க முடியாமல் விலகிக் கொண்டததாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு தான் அந்த வேடத்திற்கு செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.