2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பன் காட்டுக்குள் பல இடங்களில் பணத்தையும், யானை தந்தத்தையும், தங்கத்தையும் ஆங்காங்கே புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த புதையல்கள் எப்படி இருக்கிறது? எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அந்த புதையலை தேடி செல்லும் ஒரு குழுவின் கதையாக உருவாகி வருகிறது வீரப்பனின் கஜானா என்ற படம். இந்த படத்தில் யோகிபாபு தான் ஹீரோ. அவர் தான் புதையலை தேடும் குழுவின் கேப்டன். காமெடி கலந்த அட்வென்ஜர் படமாக உருவாகி வருகிறது. இதில் யோகி பாபு கவ்பாய் கெட்அப்பில் நடித்து வருகிறார். படத்தை யாஷ் இயக்குகிறார், கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்கிறார், ஞானசேகரன் இசை அமைக்கிறார், சாம்ஸ் தயாரிக்கிறார்.