2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
ஒரே ஷாட்டில் உருவாகி உள்ள படம் யுத்தகாண்டம். ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா குருப், யோக்ஜேப்பி, போஸ் வெங்கட், சுரெஷ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹரிசாய் இசையில், இனியன் ஜே ஹாரிஷ் ஒளிப்பதிவில், போஸ் வெங்கட் கதை, திரைக்கதையில், ஆனந்தராஜன் இயக்கியுள்ளார். பேரடைஸ் சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்த படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது.
இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது : 25 நடிகர்கள், 100 தொழில்நுட்ப கலைஞர்கள் , 50 இரவுகள் ஒத்திகை செய்து உருவாக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்ஷன் மூவி யுத்தகாண்டம். ஸ்வீடன் உலக திரைப்பட விழாவில் சிறந்த சிங்கிள் ஷாட் படத்திற்க்கான விருதை வென்றுள்ளது. மேலும் கல்கத்தா சர்வதேச படவிழாவிலும், பூட்டான் சர்வதேச படவிழாவிலும், கோனா உலக திரைப்பட விழாவிலும் சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது. மேலும் பல படவிழாக்களில் திரையீடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.