மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா |
சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியான படம் 'குட் பேட் அக்லலி'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திற்கு இசையமைக்க அனிரூத் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா மற்றும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுவாசிகா உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் உடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.