'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
கடந்த 2002ம் ஆண்டு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரீன். இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்த அவர், முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷெரீன், அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
இந்நிலையில் தான் மீண்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரீன் தெரிவித்துள்ளார். தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், விரைவில் நலம் பெற்று வருவேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் நடிகை ஷெரீன் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டார். இருந்தபோதிலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.