‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இந்த படம் வெளியானதில் இருந்தே அரசியல் வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் வட சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை கதைக்களத்தில் அரசியலையும் கலந்து படமாக்கியிருந்தார் பா.ரஞ்சித்.
குறிப்பாக, திமுகவின் கட்சிக்கொடி, சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டதோடு, நெருக்கடி காலகட்டத்தில் திமுகவினரை சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம் பெற்றது. அதேசமயம் எம்ஜிஆரைப்பற்றிய காட்சிகள் இல்லாததை சுட்டிக்காட்டி அப்போதே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் திமுகவின் பிரச்சார படம் போல் இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதாகவும் எதிர்ப்புக்குரல் கொடுத்தார்கள். அதோடு எம்ஜிஆரும் குத்துச் சண்டையில் ஆர்வமாக இருந்தவர். அப்படியிருக்க அவரை எப்படி புறக்கணிக்கலாம் என்று பா.ரஞ்சித்திற்கு எதிராக அதிமுகவினர் குரல் கொடுத்தனர்
இந்தநிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பா.ரஞ்சித் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்றும் அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.