'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ராஜூ மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் கருணாஸ். அதில், ‛‛என் மீது வன்மம் கொண்டு அவதூறாக மற்றும் அருவருப்பான உண்மைக்கு மாறான செய்தியை பரப்பி உள்ளார் ராஜூ. நடிகை த்ரிஷா பற்றியும், என்னையும் தொடர்புபடுத்தி பேட்டி கொடுத்துள்ளார். இது பல யு-டியூப் சேனலிலும் வெளியாகி உண்மைக்கு மாறாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே ராஜு மற்றும் பல யுடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோவை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.