ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! | அருண் - அர்ச்சனா காதலை கன்பார்ம் செய்த புகைப்படம்! | 'ஜெய் ஹிந்த்' என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை! | நலமாக இருக்கிறேன்: ஸ்ருதிஹாசன் தகவல் | டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் |
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் கங்கை அமரன். டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து உள்ளன, அதேபோல் இவர் இசையமைத்த மவுன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இப்படி இசையமைப்பாளர் இயக்குனராக பாடலாசிரியராக பெரிய அளவில் வெற்றி பெற்று வந்துள்ளார் கங்கை அமரன், சில படங்களில் முக்கிய கேரக்டரிலும் நடித்தும் இருக்கிறார்.
அந்த வகையில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், இதயம், சென்னை-28 உட்பட பல படங்களில் நடித்துள்ள கங்கை அமரன் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தில் கங்கை அமரன் ஒரு ஜோதிடர் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, தலைவாசல் விஜய், ராஜேஷ், யோகி பாபு, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கிறார்கள்.