டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் |
2019ம் ஆண்டு வெளிவந்த 'கடாரம் கொண்டான்' படத்திற்குப் பிறகு 'கோப்ரா' படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விக்ரம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2019ல் ஆரம்பமானது. அதன்பின் கொரோனா முதல் அலை காரணமாக படப்பிடிப்பு கொஞ்சம் தள்ளிப் போனது.
இருப்பினும் இந்த வருடம் ஜனவரி மாதம் படத்தின் டீசரை வெளியிட்டார்கள். பலவித தோற்றங்களில் விக்ரமைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். தற்போது வரையிலும் 19 மில்லியன் பார்வைகளைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது டீசர்.
எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்ற நிலையில், மீண்டும் இந்த வருடம் இரண்டாவது அலையின் காரணமாகவும் தாமதமானது. பிரம்மாண்டமான படம் என்பதால் சரியான சமயத்தில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் முடிவெடுத்தார்.
இதனிடையே, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த விக்ரமின் 60வது படத்தையும் 'கோப்ரா' தயாரிப்பாளரே தயாரிக்க ஆரம்பித்தார். 'கோப்ரா' படப்பிடிப்பு நடக்கும் போதே இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.
'கோப்ரா' அளவிற்கு படப்பிடிப்பு நாட்கள் தேவைப்படாத காரணத்தால் விக்ரம் 60 படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டார்கள். ஆகஸ்ட் 20ம் தேதி இதன் டைட்டில் அறிவிப்பு, முதல் பார்வை போஸ்டரை வெளியிட உள்ளார்கள்.
மேலும், 'கோப்ரா' படத்திற்கு முன்பாகவே 'விக்ரம் 60' படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளதாகத் தகவல். எந்தப் படம் முதலில் வந்தாலும் அடுத்தடுத்து விக்ரம் படங்கள் வெளிவரும் என்பது மட்டும் உறுதி. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் மற்றும் பலர் நடித்து வரும் படமும் 2022ல் வெளிவருகிறது.
விக்ரம் நடிக்க எப்போதோ ஆரம்பமான 'துருவ நட்சத்திரம்' படம் மட்டும் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.