பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு |

கொரிய மொழியில் 2011ம் ஆண்டு வெளிவந்த 'பிளைன்ட்' என்ற படத்தைத் தமிழில் ரீமேக் செய்து 'நெற்றிக்கண்' ஆக கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த படம். படத்திற்கு சரியான விமர்சனங்கள் கிடைக்கவில்லை. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மிகவும் போரடிக்கிறது என்றுதான் சமூக வலைத்தளங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்ய உரிமை வாங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதை ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.
கடந்த வருடம் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாதவராக நடித்த 'சைலன்ஸ்' படம் ஓடிடி தளத்தில் வந்து கடும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது அவரை பார்வையற்றவராக நடிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். 'நெற்றிக்கண்' படத்திற்கு இங்கு என்ன வரவேற்பு கிடைத்தது என்பது அனுஷ்காவிற்கு உண்மையாகத் தெரிய வருமானால் கண்டிப்பாக நடிக்க மாட்டார் என்கிறார்கள் டோலிவுட்டினர்.
கடந்த ஒரு வருட காலமாக புதிய படம் எதிலும் நடிக்க அனுஷ்கா சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.