சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
இசை அமைப்பாளர் இளையராஜாவின் உடன்பிறந்த தம்பி கங்கை அமரன். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு கங்கை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். படங்களை இயக்கவும் செய்தார். அவரது இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களின் வாரிசுகள் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல், சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். குடும்ப நிகழ்வுகள், விழாக்களில் இருவரும் கலந்து கொண்டாலும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்தார்கள். இளையராஜா குறித்து பல இடங்களில் கங்கை அமரன் கடுமையாக விமர்சித்தும் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும், கங்கை அமரனும் இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்மடூடியோவில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த படத்தை கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு, "இறை அருளுக்கு நன்றி. உறவுகள் தொடர்கதை" என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு புதிய படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது .இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.