கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் | நல்ல கதைக்காக காத்திருந்தது தவறான முடிவு : ஜெய் | சூர்யா பரிசாக கொடுத்த கார் விலை தெரியுமா? | ஆளே மாறிய 'அங்கீகாரம்' ஹீரோ | அந்த இரண்டு பேரை பாட வைப்பது கஷ்டம்: இசைநிகழ்ச்சியில் இளையராஜா சொன்ன தகவல் |

பல இயக்குனர்கள் ஒருகட்டத்தில் நடிகராக மாறுவதை போலவே இயக்குனர் செல்வராகவனும் தனது புதிய இன்னிங்ஸை தற்போது ஒரு நடிகராக துவங்கியுள்ளார்.. அந்தவகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார். அதேபோல விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் அரசியல்வாதியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் செல்வராகவன். ஜித்தன் ரமேஷுக்கு வில்லனாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
நடிகராக மாறிவிட்டதாலோ என்னவோ, தற்போது தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். சமீபத்தில் தனது புஜபலத்தை காட்டியபடி நிற்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன். அதோடு தனது தோற்றத்தையும், ஹேர்ஸ்டைலையும் ஸ்டைலாக மாற்றி உள்ளார். சில மாதங்களுக்கு முன் பார்த்ததற்கும் இப்போது அவரை பார்ப்பதற்கும் வேற மாறி வித்தியாசம் தெரிவதை காண முடிகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




