எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது தேசிய விருது பட்டியலில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்தப்படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி அவார்டும், சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் பூக்குட்டிக்கும் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருது கமிட்டி ஜூரிகளில் ஒருவரான கங்கை அமரன், தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படங்களை தேர்வுசெய்த தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“இந்தமுறை மற்ற ஜுரிகளிடம் எதற்காகவும் நான் வாதாடவில்லை. சிறந்த நடிகராக தனுஷையும், சிறந்த படமாக அசுரனையும் அவர்களே தேர்வு செய்தனர். பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்தவர்கள் ஸ்பெஷல் ஜூரி விருதுக்காக அந்தப்படத்தை தேர்வு செய்தனர். அவருக்கு எந்தப்பிரிவில் இந்த விருதை கொடுக்க போகிறீர்கள் என கேட்டேன்.. நடிப்பு, டைரக்சன், கதை என எல்லா பிரிவிலும் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அதனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்பெஷல் ஜூரி விருதை கொடுக்கிறோம் என கூறினார்கள்” என்று கூறியுள்ளார் கங்கை அமரன்.