மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணவத். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களைப் பதிவிட்டு செய்திகளில் பரபரப்பாக அடிபடுபவரும் கூட. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கங்கனா. அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆனால், இதுவரையில் இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் எட்டு லட்சம் லைக்குகளைக் கடந்து கொண்டிருக்கின்றன.
அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “வாழ்வதற்கும் இறப்பதற்கும் இடையில் காதலில் எந்த வித்தியாசமும் இல்லை, நம்பிக்கையில்லாமல் இறக்கும் ஒருவரை மட்டுமே பார்த்து நாம் வாழ்கிறோம் - காலிப்,” என்றும் பதிவிட்டுள்ளார்.