புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கடந்த மாதம் 25ம் தேதி நடிகை யாஷிகா தனது தோழி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதி ஒன்றுக்கு இரவு விருந்துக்கு சென்று விட்டு நள்ளிரவில் காரில் சென்னை திரும்பினார். அப்போது யாஷிகா ஆனந்த் கார் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா ஆனந்தின் தோழி பவனி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் உட்பட 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் யாஷிகா ஆனந்துக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகியுள்ளது.
இடது காலில் பெரிய கட்டுடன் உள்ளார், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பெட்டில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் யாஷிகாவின் இந்த போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.
"யாஷிகா எலும்புகள் சரியாகி அவர் எழுந்து நடக்கவே 6 மாதங்கள் வரை ஆகும். அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உரிய படுக்கை வசதிகளுடன் வீட்டில் இருக்கலாம். அவருக்கு எப்போதும் உதவிக்கு ஒரு ஆள் வேண்டும்" என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் தனது தோழி நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் யாஷிகா.
யாஷிகா பூரண நலம் பெற்றாலும் முன்புபோல அவர் வேகமாக நடக்கவோ, நடனமாடவோ முடியாது. என்கிறார்கள்.