தெலுங்கு சினிமாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த 'உப்பெனா' படத்தில் அறிமுகமாகி இளம் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி. தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்காக ஒரு உணர்வுவூர்மான காட்சி படமாக்கப்பட்டதாம். அந்தக் காட்சியில் லிங்குசாமி எதிர்பார்த்த அளவிற்கு கிர்த்தி நடிக்கவில்லையாம். பல டேக்குகள் வாங்கியும் அவரது நடிப்பு திருப்திப்படுத்தாத காரணத்தால் அனைவர் முன்னிலையிலும் கிர்த்தியை சத்தம் போட்டு திட்டிவிட்டாராம் இயக்குனர் லிங்குசாமி.
இதனால், மனமுடைந்த கிர்த்தி அழுது கொண்டே கேரவன் சென்றுவிட்டார் என்று டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
'அஞ்சான், சண்டக் கோழி 2' என அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்து ரசிகர்களையும், அப்படங்களின் தயாரிப்பாளர்களையும் அழ வைத்த லிங்குசாமிக்கு புதிய பட வாய்ப்பு கிடைத்ததே பெரியது. ஒரே படத்தில் தெலுங்கு ரசிகர்களை தன் நடிப்பாலும், வசீகரச் சிரிப்பாலும் கொள்ளையடித்த கிர்த்தியை இப்படி அனைவர் முன்னிலையிலும் திட்டியது தவறு என டோலிவுட்டில் லிங்குசாமியைக் கரித்துக் கொட்டி வருகிறார்களாம்.
இந்த விவகாரம் வெளியில் வந்தால் கிர்த்தியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எப்படி கமெண்ட் போடப் போகிறார்களோ ?.