சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் 'ஆந்தாலஜி' வகைப் படங்களையும் எடுத்து தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியிடுகிறார்கள்.
அந்தக் காலத்திலேயே இந்த மாதிரியான ஒரே படத்தில் இடம் பெறும் வெவ்வேறு கதைகளைக் கொண்ட ஆந்தாலஜி படங்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்பு 'பெஞ்ச் டாக்கீஸ், அவியல், டூரிங் டாக்கீஸ், 6 அத்தியாயம், சில்லு கருப்பட்டி, குட்டி ஸ்டோரி, கேர் ஆப் காதல்' ஆகிய ஆந்தாலஜி படங்கள் தியேட்டர்களில் வெளியானது.
ஓடிடி தளங்களில், “புத்தம் புது காலை, பாவக் கதைகள்', இரு தினங்களுக்கு முன்பு 'நவரசா' ஆகிய ஆந்தாலஜி படங்கள் வெளியாகின. இத்தனை ஆந்தாலஜி படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் இடம் பெற்றிருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டும்தான் ரசிக்கும்படியாக இருந்தன. சில கதைகள் சீரியல்களை விட மோசமாக இருந்தது என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
அந்த வரிசையில் அடுத்து வெங்கட் பிரபு தயாரிப்பில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ள 'கசடதபற' சோனி லிவ் ஓடிடி தளத்தில் வர உள்ளது. இப்படத்திற்கான பிரமோஷனை இன்றே ஆரம்பித்துவிட்டார்கள். வெங்கட்பிரபு, சிம்புதேவன் உள்ளிட்ட படக்குழுவினர் 'கசடதபற' என்ற தலைப்பின் ஒவ்வொரு எழுத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக இடைவெளிவிட்டு டுவீட் செய்து வருகிறார்கள்.
'கசடதபற' ஆந்தாலஜி படத்தில் உள்ள ஆறு கதைகளையும் சிம்புதேவன் மட்டுமே இயக்கியிருக்கிறார். சுந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு, விஜயலட்சுமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
நவரசா ரசிகர்களுக்குத் தந்த ஏமாற்றத்தை கசடதபற தராது என எதிர்பார்ப்போம்.




