ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் உருவாகி உள்ள 'கூழாங்கல்' படம் சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்று வருகிறது. அந்த வகையில், இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான டைகர் விருதை வென்றது.
கொரோனா பரவல் காரணமாக இந்த விருது விழாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இந்நிலையில், ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் 'கூழாங்கல்' படம் வென்ற டைகர் விருது தற்போது சென்னை வந்தடைந்துள்ளது. அந்த விருதுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உற்சாகமாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் 'கூழாங்கல்' என்பது குறிப்பிடத்தக்கது.