‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு பொரும்பாலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை. அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்கள் தான் கிடைக்கும். ஆனால் நடிகை சினேகாவுக்கு தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹரிதாஸ் படத்தில் ஹீரோயின் வாய்ப்பை தொடர்ந்து இப்போது பிரகாஷ்ராஜின் படத்திலும் சினேகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. தோணி படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ் இயக்கி, நடிக்கவுள்ள படம் "உன் சமையல் அறையில்". மலையாளத்தில் வெளியான "சால்ட் அண்ட் பெப்பர்" படத்தை தான் தமிழில் "உன் சமையல் அறையில்" என்று ரீமேக் செய்கிறார் பிரகாஷ்ராஜ். இந்தபடத்தில் பிரகாஷ்ராஜ்க்கு ஜோடி சினேகாதான். இவரோடு பாலிவுட் நடிகை தபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
பிரகாஷ்ராஜ் படத்தில் நடிப்பது பற்றி சினேகா கூறியுள்ளதாவது, பிரகாஷ்ராஜ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலோடு உள்ளேன். முன்பை போல பிஸி நடிகையாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து சினிமா பீல்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறேன். பெரிதும் இடைவெளி விடாமல் நான் படங்கள் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் நான் நடித்துள்ள ஹரிதாஸ் படம் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் டீச்சராக நடித்துள்ளேன். என்னுடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக ஹரிதாஸ் படம் அமையும் என்று கூறியுள்ளார். மேலும் தனது திருமண வாழ்க்கை பற்றி கூறும்போது, திருமண வாழ்க்கை நன்றாக போய்கொண்டு இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு எனக்கு சமைக்க தெரியாது, ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.