Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்ஆர்ஆர் - நட்பு பாடல் 5 மொழிகளில் வெளியீடு

01 ஆக, 2021 - 12:37 IST
எழுத்தின் அளவு:
RRR-Movie-friendship-song-out-in-5-languages

ராஜமவுலி இயக்கத்தில், கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தின் கரு ஜுனியர் என்டிஆர், ராம்சரண் சம்பந்தப்பட்ட நட்பு என்பதால் அதையே பொருளாகக் கொண்டு நட்பு என்ற பெயரில் தமிழ், தோஸ்தி என்ற பெயரில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பிரியம் என்ற பெயரில் மலையாளம், ஆகிய மொழிகளில் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ்ப் பாடலை அனிருத், தெலுங்குப் பாடலை ஹேமசந்திரா, கன்னடப் பாடலை யாசின் நிசார், மலையாளப் பாடலை விஜய் யேசுதாஸ், ஹிந்திப் பாடலை அமித் திரிவேதி ஆகியோர் பாடியுள்ளனர்.

பிரம்மாண்ட இணைந்த கைகள் அரங்கின் பின்னணியாக இருக்க, இரு பக்கங்களிலும் பிரம்மாண்ட தூண்கள், ஆங்காங்கே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் அரங்கில் இசையமைப்பாளர் கீரவானியுடன் ஒவ்வொரு மொழியிலும் பாடும் பிரபலங்கள், நடனக் குழுவினருடன் பாடி நடித்துள்ளனர்.

ஹம்மிங் வரும் காட்சிகளில் ஐந்து மொழிகளிலும் பாடும் பாடகர்கள் ஒன்றாக ஹம்மிங் செய்வதும், பாடலின் கடைசியில் படத்தின் நாயகர்களான ஜுனியர் என்டிஆர், ராம்சரண் இசையமைப்பாளர் கீரவானியின் தோளில் நட்பாய் கை வைக்கும் காட்சிகள் ஒரு நட்புப் பாடலுக்கான பொருத்தமான படமாக்கலாக உள்ளது.

கீரவானி தமிழில் மரகதமணி என்று அழைக்கப்படுபவர். தமிழ் வீடியோவில் மட்டும் அவரது பெயர் மரகதமணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 5 லட்சம் பார்வைகளையும், கன்னடம், மலையாளத்தில் 3 லட்சம் பார்வைகளையும் நெருங்கியுள்ளது.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இது நம்ம கவுதமனின் காலம் : சார்பட்டா பரம்பரை சரவணவேல்இது நம்ம கவுதமனின் காலம் : சார்பட்டா ... நன்றி இறைவா : சிம்புவின் புது டுவிட்டர் அப்டேட் நன்றி இறைவா : சிம்புவின் புது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in