ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ் சினிமாவில் எங்கேயோ இருக்க வேண்டியவர் என்ற வரிகளுக்கு பொருத்தமான சொந்தக்காரர் சிலம்பரசன். சிறு வயதிலிருந்தே அவருக்கிருக்கும் திறமைகளை வைத்து அவர் எங்கேயோ உச்சத்தில் இருக்க வேண்டியவர் என்று திரையுலகில் பலரும் சொல்வார்கள்.
அடுத்தடுத்த காதல் தோல்வி, படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார் என்ற தகவல்கள் அவருடைய சினிமா வாழ்க்கையில் தடைக்கற்களாக அமைந்தன. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு அவர் மீதான விமர்சனங்களை தகர்த்தெறிந்தது.
அடுத்து 'ஈஸ்வரன், மாநாடு' ஆகிய படங்களை திட்டமிடப்பட்ட நாட்களில் சிலம்பரசன் முடித்துக் கொடுத்தார் என்பது திரையுலகினருக்கு ஆச்சரியம் கலந்த செய்தி. மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்,' படத்திலும், கன்னடத்திலிருந்து ரீமேக் ஆக உள்ள 'பத்துதல' படத்திலும் நடிக்க உள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான இடைவெளியில் தன் ரசிகர்களுக்காக ஏதோ ஒரு அப்டேட்டைக் கொடுப்பவர் சிலம்பரசன். தீவிர சிவ பக்தரான சிலம்பரசன், சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார். பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு நின்று தரிசனம் செய்யும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'நன்றி இறைவா, ஓம் நமச்சிவாயா'' என்ற வாசங்களுடன் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
எதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பதற்கான காரணம் விரைவில் தெரிய வரும்.