பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாபலிபுரம் அருகில் தனது நண்பர்களுடன் கார் ஓட்டி வந்த நடிகை யாஷிகா ஆனந்த், நிலை தடுமாறியதால் அந்த கார் விபத்துக்கு உள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு தோழியின் மரணத்துக்கும் காரணமாகி விட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் மகளின் உடல்நிலை குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், யாஷிகா ஆனந்தின் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இன்னமும் தெரியாது. அதை தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அதனால் தோழி குறித்து யாஷிகா கேட்டபோது, அவரும் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லியிருக்கிறோம். மேலும், யாஷிகா ஆனந்திற்கு நடக்கும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் அவரால் நடக்க முடியும். மூன்று மாதம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.