23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிக்க, இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அம்போவென விட்டுவிட்டு, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கப் போய்விட்டார்.
அதற்கான கதை விவாதம், மற்ற முன்பணி வேலைகள் ஆகியவற்றிற்காக தற்போது ஐதராபாத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் நாயகி யார் என்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
இதனிடையே, 'இந்தியன் 2' படம் போல தங்களது படமும் நீண்டு கொண்டே போய் சிக்கலில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் தில் ராஜு, ராம் சரண் ஆகியோர் ஷங்கரிடம் படத்தை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டார்களாம்.
ஷங்கரும் அதற்கு சம்மததித்து 2022ம் ஆண்டு கோடை விடுமுறைக்குள் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவேன் என்று உறுதியளித்துள்ளாராம். அதற்குப் பின் ஹிந்தியில் 'அந்நியன்' ரீமேக்கை அவர் இயக்க வேண்டும். அதில் நடிக்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் 2022 ஜுன் மாதத்தில் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதற்காகவும்தான் ஷங்கர் உறுதி கொடுத்துள்ளாராம்.
அப்படியென்றால் 'இந்தியன் 2' எப்போது வரும் என்று கேட்கிறீர்களா ?. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகுதான் தெரியும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரது சண்டைகளுக்கு தீர்வு கண்டு தீர்த்து வைக்கும் கமல்ஹாசனாலேயே 'இந்தியன் 2' சண்டையை தீர்க்க முடியாமல் போனது அவரது ரசிகர்களுக்கும் பெரும் வருத்தம்தான்.