ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். அதன்பிறகு தாண்டவம், ஐ, தெறி, 2.0 என பல படங்களில் நடித்தார். 2.0 படத்தில் நடித்த பிறகு தனது காதலர் ஜார்ஜ் பனாயிடோ உடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்த நிலையில் அவரை திருமணம் செய்யாமலேயே 2019ல் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டார் எமி.
அதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் எமிஜாக்சன் இன்ஸ்டாகிராமில் ஜார்ஜ் பனாயிடோ சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து எமி ஜாக்சன் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.