2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் அந்தாலஜி படம் நவரசா. இதில் இன்மை என்ற கதையில் சித்தார்த்தும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இருவரும் ஆன்லைனிலேயே காட்சிகளை நடித்து ஒத்திகை செய்துள்ளனர். இந்த தகவலை பார்வதி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது எனக்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
சித்தார்த்தும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் ஜூம் கால் மூலம் ஆன்லைனில் பேசி காட்சி மற்றும் நடிப்பு குறித்து ரிகர்சல் செய்து கொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்கல் இன்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நடந்ததற்கு நாங்கள் ஆன்லைன் மூலம் செய்து கொண்ட ரிகர்சல் முக்கிய காரணமாக இருந்தது. என்றார்.