சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் | வனிதா மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த பிரதீப் ஆண்டனி | டிச., 1ல் விஷால் 34வது பட பர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியாகிறது | புடிச்சத பண்ணுனா லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் : நயன்தாராவின் ‛அன்னபூரணி' டிரைலர் வெளியானது |
முன்னணி படங்களின் காட்சிகள், பாடல்கள், டிரைலர் உள்ளிட்டவற்றை அப்படியே தத்ரூபமாக மீண்டும் காட்சிப்படுத்தி வெளியிட்டு வருவது அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா சிறுவர்கள் ஜெகமே தந்திரம் டிரைலரை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டது வைரல் ஆனது.
தற்போது சூர்யா நடித்த அயன் படத்தின் பரபரப்பான காட்சியை திருவனந்தபுரத்தை சேர்ந்த சிறுவர்கள் மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த சூர்யா அவர்களை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் அந்த சிறுவர்களுக்கு அனுப்பி உள்ள வீடியோ மெசேஜில் கூறியிருப்பதாவது:
திருவனந்தபுரம் ராஜாஜி நகரில் இருக்கும் அனைத்து இளைய சகோதரர்களுக்கும் வணக்கம் நான் சூர்யா பேசுகிறேன். என்னே ஒரு அற்புதமான பணியை நீங்கள் அனைவரும் செய்திருக்கிறீர்கள். முழுவதும் ரசித்தேன். அயன் படம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதை இவ்வளவு உயிர்ப்புடன் மீண்டும் உருவாக்கியதற்கு முதலில் பெரிய நன்றி. அயன் குழுவிலிருந்து அனைவருமே இதனை ரசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்தக் காணொலியைக் கண்டிருந்தால் கே.வி.ஆனந்த் அவர்களும் அதிகம் சந்தோஷப்பட்டிருப்பார். எந்தவிதமான தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல் இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். பேரார்வம் இருந்தால், பேரன்பு இருந்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியும், எதுவும் நம்மைத் தடுக்காது என்கிற செய்தியை நீங்கள் பலருக்குக் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் எதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எந்த சாக்கும் சொல்ல வேண்டாம் என்கிற கருத்தையும் நீங்கள் சொல்வதைப் பார்க்க முடிகிறது. முழு காணொலியில் உங்கள் உற்சாகத்தைப் பார்த்து ரசித்தேன். மீண்டும் பழைய நினைவுகளை அசைபோடுவது நன்றாக இருந்தது.
உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். இதன் பின்னால் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு. உங்கள் குடும்பம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவியுங்கள். நீங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் கண்டிப்பாகச் சிறந்து விளங்குவீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு சூர்யா பேசியுள்ளார்.