மீண்டும் மாதவனுக்கு ஜோடியாகும் கங்கனா | ப்ரோ படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகை | ஷாருக்கான் குறித்து நெகிழும் பிரியாமணி | மீண்டும் கதாநாயகனாகும் பிரபல நடிகர் | வித்தைக்காரன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சதீஷ் | பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை |
மறைந்த இசைமேதைகளின் மதிப்பும், மகத்துவமும் நமக்கு தெரியவில்லை என, இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். அவர் அளித்த பேட்டி: ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால், பாடல் என்பது எப்போதும் மலராக, இளமையாக இருக்கும்.
அந்த பாடல் தான், மக்கள் மத்தியில் நிலைக்கும். ஆனால், என் பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் புதுசாகவே இருக்கும். என் இசைப்பணி எப்போதும் போல, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வெளிநாட்டில், பீத்தோவன் வாசித்த பியோனோ போன்ற வாத்திய கருவிகள் மற்றும் வீடு போன்றவற்றை அப்படியே பாதுகாத்து, பராமரிக்கின்றனர். இங்கு நம் இசைமேதைகளின் இசைக்கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா; தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே...
இதுகுறித்து, மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, விழா ஒன்றில் பேசியுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். நமக்கு அதன் மதிப்பு, மகத்துவம் தெரியவில்லை. பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்றதொரு விஷயத்தை செய்ய வேண்டும். என் இசையில் நான் பாடவேண்டும். வரும் தலைமுறை பின்பற்றும்படி, நான் நடந்து வருகிறேன். இசை மேதைகளுக்கு இங்கு சிலை வைக்கவில்லை என்பதை பார்க்கும் போது, நம் உணர்வு அப்படி இருக்கிறது அவ்வளவுதான். ரீமிக்ஸ் பாடல்களை எதிர்ப்பது என் வேலையல்ல. கேமராவில் என் முகத்தை காட்டக்கூடாது என, நினைக்கிறேன். என் இசையில் என்னை பார்க்கலாம்.
பேரக்குழந்தைகளுக்கு நான் எங்கே கற்றுத்தருகிறேன். குழந்தைகளிடமிருந்து தானே நாம் கற்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தானே நமக்கு எல்லாம் சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு இசையறிவும், ஆர்வமும் இருப்பது ஆச்சர்யம் இல்லை. எல்லாம் ரத்த உறவுகள்தானே. அப்படித்தான் இருக்கும். வாய்ப்பு வரும் போது அவர்களை எனது இசையில் பாட வைப்பேன்.
1000 படங்களை கடந்தாலும் இன்னும் புதுமையான விஷயம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் இசையமைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வருகிறார்கள். கொரோனா காரணமாக சினிமாவே டல்லாகத் தான் இருக்கிறது. விரைவில் நிலைமை மாறும்.