அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனமும் கிடைத்து வருகின்றன. ஒரு பீரியட் படத்தை சரியாகவும், கதாபாத்திரங்களுக்கான நல்ல தேர்வையும் ரஞ்சித் செய்திருக்கிறார் பலரும் பாராட்டுகிறார்கள்.
படத்தில் யாராலும் வீழ்த்த முடியாத குத்துச்சண்டை வீரராக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேன் என்பவர் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் 'பாகுபலி 1, வீரம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'சார்பட்டா' படத்தில் 'வேம்புலி' என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பிற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களால் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளார்.
அந்த மகிழ்ச்சியில் நடிகர் அஜித்திற்கும் சேர்த்து நன்றி தெரிவித்துள்ளார். “நன்றி அஜித் சார். என்னை நானே நம்புவதற்கு தல அஜித் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பார். 'வீரம்' படத்தின் போது உங்களுடன் செலவிட்ட நாட்கள் எனது வாழ்க்கைக்குப் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கவும், சிறந்த மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறீர்கள். 'வேம்புலி' கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.