ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
'பாகுபலி' படங்கள் மூலம் இந்தியத் திரையுலகமே வியந்து பார்த்த இயக்குனர் ராஜமவுலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை அவர் இயக்கப் போகிறார். பொதுவாக ராஜமவுலி இயக்கும் படங்களைப் பற்றிய தகவல் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியாகாது. அதே சமயம் அவருடைய அப்பா கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத், மகன் ராஜமவுலியின் படங்களைப் பற்றிய சில தகவல்களை அவ்வப்போது அளித்து வருகிறார்.
அந்த விதத்தில் அடுத்த படத்தைப் பற்றிய ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ராஜமவுலி, மகேஷ் பாபு இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் தான் நடக்க உள்ளதாம். அதற்கான தரவுகளை சேகரிப்பதற்காக பிரபல தென்னாப்பிரிக்க எழுத்தாளரான வில்பர் ஸ்மித் எழுதிய நாவல்களைப் படித்து வருகிறார்களாம்.
ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' படத்தை முடிப்பதற்கு முன்பாகவே அவருடைய அடுத்த படத்தைப் பற்றிய ஆர்வம் திரையுலகிலும், ரசிகர்களிடத்திலும் வந்துள்ளது.