அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த 2019ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசமும் வெளியாகின. இரண்டு மெகா ஹீரோக்களின் படங்கள் ஒரேநாளில் வெளியானதால் இரண்டில் ஒன்றுதான் வெற்றிபெறும் என்று கருத்துக்கள் வெளியாகி வந்த நிலையில், இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைக்கு வருவது உறுதியாகி விட்ட நிலையில், அஜித்தின் வலிமை தீபாவளிக்கு வெளிவருமா? வராதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது ஒருவழியாக வலிமை பிரமோசனை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் போனிகபூர் இதுவரை படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தவில்லை. என்றபோதும், தீபாவளிக்கு படத்தை வெளியிட தயாராகி விட்டதாகவே தெரிகிறது. அப்படி ஒருவேளை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்தயும், அஜித்தின் வலிமையும் வெளியானால், மிகப்பெரிய எதிர்பார்ப்பும், யார் யாரை முந்தப்போகிறார்கள்? என்கிற பரபரப்பு நிலவும் சூழல் உருவாகும்.