விஜய் தேவரகொண்டா 13வது படத்தின் புதிய அப்டேட் | பொங்கல் ரேஸில் இருந்து விலகவில்லை - ரவி தேஜா படக்குழு உறுதி | பாடல் காட்சியுடன் தொடங்கும் விஜய் 68 படப்பிடிப்பு | பிறந்தநாளில் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது | பகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஸ்கந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் இதோ | 'அனிமல்' படத்தில் அப்பா மகன் உறவு | தணிக்கை குழு சான்றிதழ் வழங்க தயங்கிய படம் | விஷாலின் ஊழல் குற்றச்சாட்டு : உடன் நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சகம் | பட விழாவை புறக்கணிக்கும் ஸ்வயம் சித்தா : இயக்குனர் புகார் |
ஜோக்கர், ஆண்தேவதை படங்களில நாயகியாக நடித்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். அதன்பிறகு சில பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருபவர், சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோ, வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் சர்வதேச யோகா தினம் வந்தபோது பல விதமான யோக்களை செய்து அசத்தி, அதை போட்டோஷூட்டாக வெளியிட்டார். இதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் கிடைத்தன.
இந்நிலையில் தற்போது அவர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் நானா கடவுள் படத்தில் வரும் ஆர்யா போன்று தலைகீழாக யோகாசனம் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரம்யா பாண்டியனின் இந்த சாகசத்தை நெட்டிசன்கள் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர். மேலும், தனக்கு யோகாசனம் கற்றுக்கொடுத்த யோகா டீச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ரம்யா பாண்டியன்.