பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
நடிகர் ரஜினிகாந்துக்கு மொழி, நாடு கடந்து ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். முத்து படத்தில் தொடங்கியது ரஜினியின் ஜப்பான் அலை. அந்தப் படத்தில் இடம்பெற்ற, தில்லானா தில்லானா நீ தித்திக்கும் தேனா பாடலில், ரஜினியின் நடனத்தில் மயங்கிப் போன ஜப்பானியர்கள் ரஜினிக்கு டான்ஸ் மகாராஜா என்ற பட்டத்தை அளித்தனர். ரஜினியின் படங்கள் ஜப்பானில் தொடர்ந்து வெளியாகி பெரிய வெற்றி பெற்று வருகின்றன.
ரஜினியின் ரசிகர்களான ஜப்பானியர்கள் தமிழகம் வந்து ரஜினியை சந்தித்த நிகழ்வும் நடந்தது. ரஜினியின் தர்பார் படம் வெளியான போது, ஒரு ஜப்பானிய ரசிகர் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்தார். சரளமாக தமிழில் பேசி ஆச்சர்யம் அளித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் நேற்று ஜப்பானில் வெளியாகியுள்ளது. ஜப்பானில் உள்ள தமிழர்களுடன், ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களும் தர்பார் வெளியானதை கொண்டாடி வருகின்றனர். லிஜோஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ஜல்லிக்கட்டு திரைப்படமும் ஜப்பானில் வெளியாகிறது. இந்தப் படம் சர்வதேச அரங்கில் பெற்ற அங்கீகாரம் காரணமாக அங்கு திரையிடப்படுகிறது.