'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
மகிழ் திருமேனியின் முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் அறிமுகமான 3 ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் லட்சுமி பிரியா சந்திரமவுலி. அந்த படம் தோல்வி அடைந்ததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.
பின்னர் சுட்ட கதை படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு கள்ளபடம், களம், டிக்கெட், ரிச்சி, ஓடு ராஜா ஓடு உள்பட பல படங்களில் நடித்தார். இந்த படங்களில் கிடைக்காத புகழ் கர்ணன் படத்தில் கிடைத்தது. சமீபத்தில் அவர் மலையாளத்தில் வெளிவந்த கோல்ட் கேஸ் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவர் விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார். சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். அச்சு ராஜமணி இசை அமைக்கிறார், பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கருணாகரன். சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் சக்திவேல் பெரியசாமி படம் குறித்து கூறியதாவது: ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு. தற்காலத்திய பிரச்சனைகளை சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்கள் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் இருக்கும்.
லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்க கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில் சிறந்த படமாக அமையும். என்றார்.