ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. தமிழகத்தில் 2011-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் வடிவேலுக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவும் இல்லை. இருப்பினும் வடிவேலுவின் புதிய படங்கள் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண நிதியாக ரூ5 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர் வடிவேலு வழங்கினார். பின்னர் அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலினையும், தமிழக அரசையும் பாராட்டினார். மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்துங்கள் என வேண்டுகோள் வைத்தார்.
இந்நிலையில் நேற்று முதல்வரை சந்தித்த பின் தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று இருக்கிறார். அங்கு தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகளுடன் அளவளாவி உள்ளார். சில மணித்துளிகளில் கலகலப்பான தன் நகைச்சுவை மூலம் அறிவாலயத்தையே மகிழ்ச்சியாக்கி உள்ளார். இந்த படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.