இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் தடம் பதித்து வெற்றி பெற்றுள்ளார் சமந்தா. தற்போது சகுந்தலம், காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. சமந்தா தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
சமந்தா அடிக்கடி போட்டோஷூட் எடுத்து படங்களை பகிர்வார். சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இந்நிலையில் சமந்தா, செல்ல நாய்க்குட்டியுடன் துள்ளி குதித்து பலூன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில மணி நேரத்திலேயே பல லட்சம் லைக்குகள் குவித்துள்ளது.