Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய பின் வடிவேலு பேட்டி

14 ஜூலை, 2021 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Do-not-split-Tamilnadu-says-Vadivelu

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு. சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் வடிவேலு இன்று கொரோனா நிதி தருவதற்காக தலைமை செயலகம் வந்தார். தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 5 லட்சம் நிதியை நேரடியாக கொடுத்தவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

நல்லதே நடக்கும்


கேள்வி - தமிழ முதல்வராக ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
பதில் - ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்திலேயே மிக சிறப்பாக செயல்பட்டு உலகமே உற்று பார்க்கும் வகையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவுட்டார். அவரது ஒவ்வொரு செயல்பாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. யார் மனதையும் புண்படுத்தாமல் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் நெகிழ வைக்கிறது.

கேள்வி - திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பின்னர் தான் படங்களில் நடிப்பது குறைந்தது. இப்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ளதால் உங்களை அதிக படங்களில் பார்க்க முடியுமா?

பதில் - நல்லதே நடக்கும்.கொங்கு நாடு


கேள்வி - மக்களுக்கு சொல்ல விரும்புவது?
பதில் - ஒரு படத்தில் அல்வா வாசு என்னிடம் வந்து தெரிஞ்ச டாக்டர் கிளினிக் திறந்திருக்கார். ஒரு ஊசி போட்டு போங்க... என்று அழைப்பார். அதுபோல மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன்.

கேள்வி - கொங்கு நாடு கோரிக்கை பற்றி?
பதில் - நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள். நாடு நாடு என தனித் தனியாக பிரித்தால் என்ன ஆவது?

இவ்வாறு வடிவேலு பேட்டி அளித்தார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
இதை முதல் பார்வையா வெளியிட்டிருக்கலாமே? : அஜித் ரசிகர்கள் ஆதங்கம்இதை முதல் பார்வையா ... மகளை அறிமுகப்படுத்தும் மூடர் கூடம் நவீன் மகளை அறிமுகப்படுத்தும் மூடர் கூடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
15 ஜூலை, 2021 - 09:38 Report Abuse
pradeesh parthasarathy எங்க எனக்கு கொங்கு நாட்டிலிருந்து திருநெல்வேலி நாட்டுக்கு போகணும்....
Rate this:
N. Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூலை, 2021 - 09:30 Report Abuse
N. Srinivasan ஆஹா..... தனக்கு திரை உலகில் திரும்பி வருவதற்கு இவர் போட்ட சின்ன மீன் ஐந்து லட்சம் ..... இவருடைய நாட்டு பற்றை பாராட்டத்தான் வேண்டும்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15 ஜூலை, 2021 - 09:16 Report Abuse
Aarkay என்னதான் கூவினாலும் இவர் படம் இனி ஓடப்போவதில்லை. Successful come back செய்ய இவர் என்ன மொஹீந்தர் அமர்நாத்தா? வெறும் ஐந்து லட்சத்திற்கே இவ்ளோ பில்டப்பா?
Rate this:
binakam - chennai,இந்தியா
15 ஜூலை, 2021 - 08:41 Report Abuse
binakam பிரபலங்களுக்கு நுனிப்புல் மேய்ந்து அறிக்கை விடுவதே வாடிக்கையாகி விட்டது. அகல உழுவதை விட ஆழ உழு என்று சொல்லுவார்கள். நிருவாக வசதி மற்றும் மத்திய அரசு திட்டங்கள் பாமர மக்களை சென்றடைய மிக உன்னதமான திட்டம் கொங்கு நாடு பிரிப்பு. ஆந்திர மற்றும் தெலுங்கானா பிரிப்பு அதிக வளர்ச்சியை நம்மால் காணமுடியுது. சக்ராயுதம்
Rate this:
binakam - chennai,இந்தியா
15 ஜூலை, 2021 - 08:28 Report Abuse
binakam நிருவாக வசதியின் மூலம் மத்திய அரசின் எல்லா திட்டங்களும் பாமர மக்களை சென்றடைய கொங்கு நாடு அவசியம். திருட்டு முன்னேற்ற கழகம் விலகியிருந்து கொங்கு மக்கள் நலனுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசுக்கு ஆதரவு கொடு. மோடிஜியின் இந்திய ஒட்டு மொத்த வளர்ச்சி உலக அளவில் இன்றய தேவை என்பதை அனைவரும் புரிந்து கொங்கு நாட்டுக்கு ஆதரவு தருவோம் தமிழர்களே. சக்ரா
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in