21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் |

ஓடிடி தளங்கள், யு டியூப் தளங்களில் வெளியாகும் வீடியோக்களுக்கு சென்சார் வேண்டும் என்று ஒரு பக்கம் குரல்கள் உள்ளன. அது போல சமூக வலைத்தளங்களிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற குரலும் சீக்கிரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆன்லைன் வகுப்புகளில் சிறுவர்கள், சிறுமியர்கள் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அவர்களிடம் மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிடும் கிளாமரான, கிளர்ச்சியான புகைப்படங்களைப் பார்க்கவும் வாய்ப்புள்ளது.
சில குறிப்பிட்ட நடிகைகள் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக பிக்பாஸ் பிரபலங்கள் ஷிவானி, சாக்ஷி அகர்வால் முக்கியமாக இருக்கிறார்கள். இவர்களது புகைப்படங்களுக்கு சென்சார் வைத்தால் கூட தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.
அவர்களைப் போல பல முன்னணி கதாநாயகிகள் கூட பிகினி, கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நேற்று வெளியிட்ட புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சம். அந்தப் புகைப்படங்களுக்கு 1 மில்லியன் லைக் வந்ததே அதற்கு உதாரணம்.
'மாஸ்டர்' பட நாயகியான மாளவிகா மோகனனும் அவர் பங்கிற்கு ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்னும் ஏட்டிக்குப் போட்டியாக எத்தனை பேர் இப்படி புகைப்படங்களை பதிவிடப் போகிறார்களோ ?.