ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான நான்கு சங்கங்கள் தான் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் கில்டு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என நான்கு சங்கள் தான் அவை. இவற்றோடு டிஆர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் உள்ளது. இந்த சங்கம் செயல்படுகிறதா இல்லையா என்பது வெளியில் தெரியாமல் உள்ளது.
இவற்றில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் சில முக்கியமான பெரிய தயாரிப்பாளர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த சங்கம் தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றை அந்த சங்கத்தினர் மறுத்துள்ளனர்.
இது குறித்து டுவிட்டர் தளத்தில், “செய்திகள் தவறானவை. எங்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக நாங்கள் தனித்த சங்கமாகத்தான் தொடர்ந்து செயல்படுவோம். அதே சமயம் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரச்சினைகளுக்காக சேம்பர், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் நாங்கள் தனித்தே இருப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து தாய் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்தான் முதல்வரை சில முறை சந்தித்துள்ளனர்.