நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விஜய் இயக்கத்தில் கங்கனா ரணவத் நடிப்பில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 'தலைவி' படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு தணிக்கையும் கூட முடிந்துவிட்டது. இப்படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். கொரோனா இரண்டாது அலையின் காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய் இருந்தது.
ஆனால், படத்தின் வெளியீட்டுத் தேதி எப்போது என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் படத்தின் வெளியீடு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே, படத்தின் நாயகியாக கங்கனா அது பற்றி இன்ஸ்டாகிராமில், “தலைவி' படத்தின் வெளியீடு பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. வதந்திகளிலிருந்து விலகி இருங்கள். நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது படத்தை வெளியிடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினம், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் படம் வெளியாகுமா அல்லது சாதாரண நாட்களில் வெளியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.