'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தது. இந்த நிலையில், இரண்டாம்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. வட இந்திய பகுதிகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்த காட்சிகளையும் செய்து சென்னையிலேயே முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். தெலுங்கில் ஆலவைகுந்தபுரம் படத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் பாடலான புட்டபொம்ம்மாவிற்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர், பீஸ்ட்டிற்கும் நடன இயக்கம் செய்து வருகிறார்.
முதல் நாள் ஷூட்டில் அவருக்கு விஜய்யும் யூனிட்டும் சேர்ந்து பொக்கே கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். விஜய் - பூஜா ஹெக்டேவின் டூயட் ஒரு வாரத்திற்கு மேலாக ஷூட் செய்யப்பட்டு வருகிறது. கோகுலம் ஸ்டூடியோவில் இந்த பாடல் காட்சி படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிய இருக்கிறது. பின்னர் மகாபலிபுரத்தில் வசன காட்சிகளையும் மால் செட் போட்டு சண்டைக் காட்சிகளையும் எடுக்க இருக்கிறார்கள்.