மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் |
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பு எடுக்க வேண்டும் என்பதால் கொரோனா ஊரடங்கு முடியட்டும் என்று காத்திருந்தனர். ஆனால், மூன்றாவது அலை வரும் என்ற ஆபத்து இருப்பதால் வெளிநாடு ஷூட்டிங் சாத்தியம் இல்லை. எனவே ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்துவிட இருக்கிறார்கள்.
விரைவில் தொடங்க இருக்கும் இந்த ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார். ஒரு வாரத்துக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் காட்சிகளை ஐரோப்பாவில் நடப்பது போல் இணைக்க திட்டமாம். எனவே அவுட்டோர் லொக்கேஷன் காட்சியைப் படமாக்க மட்டும் படக்குழுவின் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வர இருக்கிறார்கள்.