ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் மிக்கவர் நிவேதா. ஏற்கனவே கார் ஓட்டும் ஆர்வம் குறித்து பல பேட்டிகளில் கூறி உள்ளார். அதோடு அது தொடர்பான போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இப்போது கார் ரேஸ் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கார் ரேஸ் பயிற்சி செய்யும் போட்டோ, வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, மற்றொரு பார்வை. .. மற்றொரு கனவு... மற்றொரு வாழ்க்கை... என பதிவிட்டுள்ளார். அஜித் பாணியில் நிவேதா கார் ரேஸில் இறங்கிவிட்டார் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.